மூன்றாம் பாலினத்தவர் பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கம்
மூன்றாம் பாலினத்தவர் பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.
முசிறி ஆக.20-
முசிறியில் ஒரு தனியார் பள்ளியில் வட்ட சட்ட பணிகள் குழு சார்பில் 3-ம் பாலினத்தவரின் பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கில் வட்ட சட்டப் பணி குழு வழக்கறிஞர்கள் பத்ம ராஜ், பாலகிருஷ்ணன் மூன்றாம் பாலினத்தவர் குண நலன்கள் பற்றியும், அவர்களும் நம்மை போன்றவர்கள் தான், ஆகவே அவர்களை நம்மில் ஒருவராக கருதி மதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இதில் ஆசிரியைகள் மற்றும் 300-க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வட்ட சட்டப் பணி குழுவினர் செய்திருந்தனர்.