மாற்றுத்திறனாளி குழந்தைகளை பள்ளியில் சேர்க்க வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி
ஆரணியில் மாற்றுத்திறனாளி குழந்தைகளை பள்ளியில் சேர்க்க வலியுறுத்தி பள்ளி மாணவ, மாணவிகள் விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.
ஆரணி
ஆரணியில் மாற்றுத்திறனாளி குழந்தைகளை பள்ளியில் சேர்க்க வலியுறுத்தி பள்ளி மாணவ, மாணவிகள் விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.
ஆரணி அருணகிரி சத்திரம் கண்ணப்பன் தெருவில் நகராட்சி உயர்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளி மாணவ, மாணவிகள் மாற்றுத்திறனாளி குழந்தைகளை பள்ளியில் சேர்க்க வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடத்தினர். பேரணிக்கு தலைமை ஆசிரியர் எல்.தேவராசி தலைமை தாங்கினார். நகராட்சி தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் மோகன்ராஜ், பள்ளி மேலாண்மை குழு தலைவர் ஜெயந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான சிறப்பு பயிற்றுனர்கள் அ.பாரத் ரத்னா, சுமதி ஆகியோர் அனைவரும் வரவேற்றனர். நகர சபை உறுப்பினர்கள் அமுதா ஆறுமுகம், கே. எஸ்.சிவகுமார் ஆகியோர் கலந்து கொண்டு விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்தனர். பள்ளி மாணவர்கள் கோஷங்களை எழுப்பியும், மாற்றுத்திறனாளி குழந்தைகளை பள்ளியில் சேர்த்தல் வலியுறுத்தி பதாகைகள் கையில் ஏந்தியும் சென்றனர்.
பேரணியானது அருணகிரி சத்திரம், சபாஷ் கான் தெரு, பூந்தோட்டம் காண்ட்ராக்டர் பொன்னுசாமி தெரு வழியாக மீண்டும் பள்ளியை வந்தடைநற்தது. பேரணியில் ஆசிரியர்கள் அன்பரசு, கோபால், ரேகா, ரூபி, சாந்தி, கலைவாணி உள்பட பல கலந்து கொண்டனர். முன்னதாக விழிப்புணர்வு பேரணியில் பள்ளி மாணவர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இதேபோல ஆரணி அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இருந்தும் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான சிறப்பு பயிற்றுனர்கள் ஜெயசீலி தலைமையில் விழிப்புணர்வு ஊர்வலமும் நடந்தது.