பரங்கிப்பேட்டை அருகேஅரசு பள்ளி மாணவர் சேர்க்கை குறித்த விழிப்புணர்வு பேரணி

பரங்கிப்பேட்டை அருகே அரசு பள்ளி மாணவர் சேர்க்கை குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

Update: 2023-04-20 20:24 GMT


பரங்கிப்பேட்டை, 

பரங்கிப்பேட்டை அருகே மணமேடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி சார்பில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பள்ளி முன்பு நடந்த தொடக்க நிகழ்ச்சிக்கு வட்டார கல்வி அலுவலர் ராஜசேகரன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக ஆயிபுரம் ஊராட்சி மன்ற தலைவர் நாகராஜன் கலந்து கொண்டு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் பள்ளி மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் கலந்து கொண்டு மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பிரசார வாகனத்துடன் முக்கிய வீதிகள் வழியாக பேரணியாக சென்று, பொதுமக்களிடம் மாணவர் சேர்க்கை குறித்தும், அரசின் கல்வி சார்ந்த திட்டங்கள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்த பேரணியில் பள்ளி மேலாண்மை குழு தலைவர் குணவதி, பள்ளி ஆசிரியைகள் பரமேஸ்வரி, கனிமொழி, அபினா, ஆசிரியர் பயிற்றுனா் வடிவேல், இல்லம் தேடி கல்வி திட்ட ஒருங்கிணைப்பாளர் ரவீந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்