கல்லூரி மாணவ- மாணவிகளின் விழிப்புணர்வு பேரணி

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது குறித்து கல்லூரி மாணவ- மாணவிகளின் விழிப்புணர்வு பேரணி

Update: 2022-11-29 18:45 GMT

விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் மற்றும் திருத்தம் மேற்கொள்வது குறித்து கல்லூரி மாணவ- மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் இருந்து புறப்பட்ட இப்பேரணியை மாவட்ட கலெக்டர் மோகன், கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் கலந்துகொண்ட மாணவ- மாணவிகள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வது குறித்த விளம்பர பதாகைகளை கையில் ஏந்தியவாறு சென்று பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி துண்டு பிரசுரங்களை வினியோகித்தனர். முன்னதாக கலெக்டர் மோகன் கூறுகையில், 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்த்துக்கொள்வதற்கான சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு அதன் மூலம் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் மேற்கொள்ளும் பணிகள் நடைபெற்று வருகிறது. எனவே பொதுமக்கள், கல்லூரி மாணவ- மாணவிகள் அனைவரும் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயரை சேர்த்து ஜனநாயக கடமையை நிறைவேற்ற வேண்டும் என்றார்.

இதில் மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி, விழுப்புரம் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன், மாவட்ட வழங்கல் அலுவலர் மகாராணி, தாசில்தார் ஆனந்தகுமார், தேர்தல் தனி தாசில்தார் உஷா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்