கோவில்பட்டியில் விழிப்புணர்வு பேரணி

கோவில்பட்டியில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் ஓசோன் விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.

Update: 2022-09-16 18:45 GMT

கோவில்பட்டி:

கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தேசிய பசுமை படை, கோவில்பட்டி சுழற்சங்கம் இணைந்து உலக ஓசோன் தின விழிப்புணர்வு பேரணி நடத்தியது. கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் கலந்து கொண்ட பேரணியை இந்திய மருத்துவ சங்க பொருளாளர் டாக்டர் கமலா மாரியம்மாள் தொடங்கி வைத்தார். பேரணி பள்ளி முன்பிருந்து புறப்பட்டு எட்டையபுரம் மெயின் ரோடு, செண்பகவல்லி அம்மன் கோவில் மேல ரதவீதி, அரசு அலுவலகங்கள் தெரு வழியாக சென்று மீண்டும் பள்ளியை அடைந்தது. பள்ளி மாணவிகளுக்கு உலக ஓசோன் தின விழிப்புணர்வு பேச்சு, கட்டுரை மற்றும் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. நிகழ்ச்சிக்கு சுழற்சங்க தலைவர் ரவி மாணிக்கம் தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியை ஜெயலதா, பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தேசிய பசுமை படை ஆசிரியர் சுப்பிரமணியன் வரவேற்று பேசினார். பள்ளி மேலாண்மை குழு நிர்வாகிகள் ரெங்கம்மாள், கவுரி, முத்துமுருகன், மணிகண்டமூர்த்தி, மாரியப்பன், ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இசை ஆசிரியர் அமல புஷ்பம் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்