வத்திராயிருப்பு
வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அரசு பள்ளியில் மணவர்களை சேர்க்க வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. ேபரணிக்கு வட்டார கல்வி அலுவலர் சீனிவாசன் தலைமை தாங்கினார். பள்ளி மாணவர்கள் சிலம்பம் சுற்றியும், கோலாட்டம் ஆடியும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் தலைமை ஆசிரியர் நளினா, பள்ளி மேலாண்மை குழு தலைவி ராஜேஸ்வரி, ஆசிரியர்கள், மாணவர்கள், இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.