விழிப்புணர்வு பேரணி

தொழுநோய் விழிப்புணர்வு அனுசரிப்பு இயக்கத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

Update: 2023-01-30 19:45 GMT


விருதுநகர் தேசபந்து மைதானத்தில் தொழுநோய் விழிப்புணர்வு அனுசரிப்பு இயக்கத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை இணை இயக்குநர் (சுகாதார பணிகள்) முருகவேல் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் செவிலியர் பயிற்சி பள்ளி மாணவிகள் கலந்து கொண்டனர். தேசபந்து மைதானத்தில் தொடங்கிய இந்த பேரணியானது பழைய பஸ்நிலையம், மாரியம்மன் கோவில், மெயின் பஜார், தெப்பம் வழியாக வந்து நகராட்சி அலுவலகத்தில் முடிவடைந்தது. இதில் 100-க்கும் மேற்பட்ட செவிலியர் பயிற்சி பள்ளி மாணவிகள் கலந்து கொண்டனர். முன்னதாக செவிலியர் கல்லூரி மாணவிகள் தொழுநோய் குறித்த விழிப்புணர்வு உறுதிமொழியையும் ஏற்றுக்கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்