விருதுநகர் மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தலின் பேரில் மகளிர் திட்டம் சார்பில் சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு பிரசார இயக்கம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை மாவட்ட திட்ட இயக்குனர் திலகவதி கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேரணியானது மருத்துவக்கல்லூரியில் தொடங்கி கலெக்டர் அலுவலகம் வரை சென்று முடிவடைந்தது. இதில் மகளிர் சுய உதவி குழுக்களை சேர்ந்த பெண்கள், இல்லம் தேடி மருத்துவ பணியாளர்கள் திரளாக கலந்து கொண்டு விழிப்புணர்வு பதாகைகளை ஏந்திய படி சென்றனர்.