விருதுநகர் யூனியன் ரோசல்பட்டி பஞ்சாயத்தில் உலக கழிப்பறை தினத்தையொட்டி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. ரோசல்பட்டி பஞ்சாயத்து அலுவலகத்தில் தொடங்கிய விழிப்புணர்வு பேரணியை மாவட்ட திட்ட இயக்குனர் திலகவதி தொடங்கி வைத்தார். பேரணி முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் பஞ்சாயத்து அலுவலகத்தில் நிறைவடைந்தது.
பேரணியில் கழிப்பறை பயன்படுத்துவதன் அவசியம் குறித்து வலியுறுத்தியதோடு, உறுதிமொழியும் எடுத்துக் கொள்ளப்பட்டது.
பஞ்சாயத்து தலைவர் தமிழரசி ஜெயமுருகன், யூனியன் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சாந்தி, போத்திராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.