விழிப்புணர்வு பேரணி
முதுகுளத்தூர் வட்டார ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டம் சார்பில் மாற்றுத்திறனாளிகள் தின விழாவை முன்னிட்டு முதுகுளத்தூர், காக்கூர் பகுதிகளில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
முதுகுளத்தூர்,
முதுகுளத்தூர் வட்டார ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டம் சார்பில் மாற்றுத்திறனாளிகள் தின விழாவை முன்னிட்டு முதுகுளத்தூர், காக்கூர் பகுதிகளில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் முதுகுளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர். மாற்றுத்திறன் குழந்தைகளை கண்டறிந்து அவர்களை பள்ளியில் சேர்க்க வேண்டும் அவர்களுக்கு ஊக்கம் தர வேண்டும் உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை மாணவர்கள் கையில் ஏந்தி சென்றனர். இந்நிகழ்ச்சியில் வட்டார கல்வி அலுவலர், தலைமை ஆசிரியர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.