வன வளங்களை பாதுகாக்க விழிப்புணர்வு நிகழ்ச்சி

கல்வராயன்மலையில் வன வளங்களை பாதுகாக்க விழிப்புணர்வு நிகழ்ச்சி

Update: 2022-12-31 18:45 GMT

கச்சிராயப்பாளையம்

காவல்துறை சார்பில் வாரந்தோறும் சனிக்கிழமை சுற்றுச்சூழல் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் கல்வராயன்மலையில் உள்ள இயற்கை வளங்களையும், வன வளங்களையும் பாதுகாக்க பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகலவன் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் தூய்மைப்பணியில் ஈடுபட்டனர்.

இதில் கல்வராயன்மலையில் இருந்து பெரியார் நீர்வீழ்ச்சி, கோமுகி அணை வியூ பாயிண்ட் ஆகிய பகுதிகளில் உள்ள குப்பைகளை சேகரித்து மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை தனித்தனியாக பிரித்து தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இதில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஜவகர்லால், துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ், இன்ஸ்பெக்டர்கள் பாலகிருஷ்ணன், புவனேஸ்வரி, தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் சண்முகம், சப்-இன்ஸ்பெக்டர்கள் ஏழுமலை, ஆனந்தராஜ் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட போலீசார் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்