பெண்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

மணலூர்பேட்டையில் பெண்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

Update: 2022-10-20 18:45 GMT

திருக்கோவிலூர்

திருக்கோவிலூர் அருகே உள்ள மணலூர்பேட்டை போலீஸ் நிலையம் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி மணலூர்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இதில் போலீஸ் ஏட்டு கோகிலா மற்றும் போலீசார் கலந்துகொண்டு இளம் பெண் திருமணம் மற்றும் பெண்கள் பாதுகாப்பு, விழிப்புணர்வு செல்போனை பாதுகாப்பாக பயன்படுத்துவது எப்படி? என்பது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தொடர்ந்து மணலூர்பேட்டை கடைத்தெரு மற்றும் பஸ் நிலையம் ஆகிய பகுதிகளில் திரண்டிருந்த பெண்களிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்