குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி

குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு தொழிலாளர் துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2022-06-08 12:49 GMT

திருவண்ணாமலை

குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு திருவண்ணாமலை தேரடி தெருவில் திருவண்ணாமலை தொழிலாளர் நலத்துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) மீனாட்சி தலைமை தாங்கினார். தொழிலாளர் துணை ஆய்வாளர் மனோகரன், உதவி ஆய்வாளர்கள் சாந்தி, ஆத்திப்பழம், முத்திரை ஆய்வாளர் சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியின்போது தேரடி தெரு பகுதியில் உள்ள கடைகள் மற்றும் பொதுமக்களிடம் குழந்தை தொழிலாளர் முறைக்கு எதிராக துண்டு பிரசுரம் வினியோகிக்கப்பட்டது. மேலும் குழந்தை தொழிலாளர் குறித்து அந்த பகுதியில் உள்ள கடைகள் மற்றும் நிறுவனங்களில் திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

நிகழ்ச்சியில் திருவண்ணாமலை தாலுகா அனைத்து வியாபாரிகள் சங்க தலைவர் சண்முகம், செயலாளர் சங்கர், பொருளாளர் ரத்தினவேலு, நகர ஹோட்டல் சங்கத் தலைவர் அரங்கநாதன், நுகர்பொருள் தலைவர் அருண்குமார், செயலாளர் பாஸ்கர் உள்பட வியாபாரிகள் சங்க உறுப்பினர்கள், அடகு கடை சங்க உறுப்பினர்கள், பூ வியாபாரிகள் சங்க உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்