நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் கல்வி நிறுவன மாணவர்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சி
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் கல்வி நிறுவன மாணவர்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சி
பொங்கலையொட்டி மக்கள் அனைவரும் மண்பானையில் பொங்கலிட வலியுறுத்தி திருவாரூர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் கல்வி நிறுவனம் மற்றும் மகரிஷி சி.பி.எஸ்.இ. பள்ளி மாணவ- மாணவிகள் இணைந்து நேற்று மண்பானை, கரும்பு, மஞ்சள், இஞ்சி கொத்து, அகப்பை உள்ளிட்ட பொங்கல் பொருட்களை திருவாரூர் மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணனிடம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நிகழ்ச்சியில் கல்லூரி இயக்குனர் விஜயசுந்தரம் பேசுகையில், நமது முன்னோர்கள் மண்பானையை பயன்படுத்தி உணவுகள் உண்டதால் அவர்கள் நோயற்ற வாழ்வு, குறைவற்ற செல்வமாக வாழ்ந்து வந்தனர். மண்பானை தயாரிக்கும் மக்களின் வாழ்வாதரம் உயர வேண்டும் என்றார். பின்னர் கலெக்டர் பேசுகையில், தற்போது இருக்கும் சூழ்நிலையில் இந்த விழிப்புணர்வு மிகவும் ஏற்றதக்க வகையில் இருக்கிறது. மண்பானை தயாரிக்கக்கூடிய தொழிலாளர்கள் நலமும், வளமும் பெற அனைவரும் மண்பானையினை பயன்படுத்தி பொங்கலிட வேண்டும் என கேட்டுக்கொண்டார். இதில் கல்லூரியின் தலைவர் தாளாளர் வெங்கட்ராஜுலு, செயலர் சுந்தர்ராஜீ, முதன்மை செயல் அதிகாரி நிர்மலா ஆனந்த், நிர்வாக அலுவலர் சீதா கோபாலன், முதல்வர்கள் சிவகுருநாதன், கலைமகள், சுமித்திரா மற்றும் துறை தலைவர்கள், ஆசிரியர்கள், பணியாளர்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.