வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி
வாணியம்பாடியில் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
வாணியம்பாடி செட்டியப்பனூர் கூட்ரோடு பகுதியில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் உத்திரவின் பேரில், தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனி தலைமையில் போலீசார், வாணியம்பாடி - திருப்பத்தூர் செல்லும் சாலையில் சென்ற மோட்டார் சைக்கிள்கள், வாகனங்களை ஓட்டி வந்தவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர். அப்போது ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்தும், முக கவசம் அணிய வேண்டும் எனவும், தேசிய நெடுஞ்சாலைகளிலும், சாலைகளிலும் பாதுகாப்பாக வாகனங்கள் ஓட்டுவது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்