கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி
தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரியில் மாணவர்களின் தொழில் முனைவு திறனை வளர்க்கும் வகையிலான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரியில் மாணவர்களின் தொழில் முனைவு திறனை வளர்க்கும் வகையிலான வ.உ.சி.பஜார் என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் வீரபாகு முன்னிலை வகித்தார். தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி முதல்வர் அகிலன் நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
மாணவ-மாணவிகளிடம் தலைமை பண்பு, ஆளுமைத்திறன், தொழில் முனைவதற்கான எண்ணங்கள், சகோதரத்துவத்தை பேணி காப்பது உள்ளிட்ட பண்புகளை வளர்க்கவும், இளைய சமுதாயத்தை சிறந்ததாக உருவாக்கவும், அவர்களின் கல்வித்திறனை வளர்க்கவும் இந்த நிகழ்ச்சி உதவியாக இருக்கும் என்று கல்லூரி முதல்வர் தெரிவித்தார். நிகழ்ச்சியில் மாணவ-மாணவிகள், கல்லூரி பேராசிரியர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.