அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

ஆற்காடு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2023-06-21 19:00 GMT

ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதி உத்தரவின்படி, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு குமார் (இணைய வழி குற்றப்பிரிவு) மேற்பார்வையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் தலைமையில் ஆற்காடு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு சைபர் கிரைம், நிதி நிறுவன மோசடி, போலி சமூக ஊடக கணக்குகள் மோசடி, போலி கடன் செயலி மற்றும் சைபர் கிரைம் உதவி எண்:1930 இணையதள முகவரி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் சப்- இன்ஸ்பெக்டர்கள் தியகராஜன், ஆற்காடு டவுன் தமிழ்செல்வி மற்றும் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்