போதைப்பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி

போதைப்பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி

Update: 2023-08-12 18:45 GMT

நாகை அந்தோணியார் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் சார்பில் போதைப்பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தலைமை தாங்கினார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ் சிங்க், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுபாஷினி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் ஜோசப் வரவேற்றார். முன்னதாக போதைப்பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் தீங்குகள் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பள்ளி மாணவ- மாணவிகளுக்கு கலெக்டர் வினியோகம் செய்தார். இதில் மாவட்ட கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் வைத்திலிங்கம், இன்ஸ்பெக்டர் வெற்றிவேல், சப்- இன்ஸ்பெக்டர் பத்மசேகர் உள்பட 500-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர். முடிவில் துணை போலீஸ் சூப்பிரண்டு கென்னடி நன்றி கூறினார். திருமருகல் அரசு மேல்நிலைப்பள்ளி சார்பில் போதைப்பொருட்கள் இல்லா வளாகம் மற்றும் போதைப்பொருட்கள் ஒழிப்பு ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தை திட்டச்சேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அக்பர் அலி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் நற்குணம் மற்றும் ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர்.முன்னதாக பள்ளி வளாகத்தில் புகையிலை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்