போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
ஆர்.புதுப்பாளையத்தில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
ராசிபுரம்
ராசிபுரம் அருகே உள்ள ஆர்.புதுப்பாளையம் பஸ் நிறுத்தம் அருகே பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் இடையே போதைப்பொருள் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு ராசிபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் தலைமை தாங்கினார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் மாணிக்கம் மற்றும் தங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போதைப் பொருட்களை மாணவர்களும், பொதுமக்களும் பயன்படுத்தக் கூடாது என்றும் மாணவர்களை நல்ல ஒழுக்க நிலைக்கு பெற்றோர்கள் கொண்டு வர வேண்டும் என்றும், போதைப் பொருளை பயன்படுத்துவதால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும். எனவே பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் பேசினார். இதில் பொதுமக்கள் மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.