விழிப்புணர்வு நிகழ்ச்சி

தீ தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

Update: 2023-07-26 20:09 GMT

அருப்புக்கோட்டை, 

அருப்புக்கோட்டை-திருச்சுழி சாலையில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தீயணைப்பு துறை சார்பில் மருத்துவமனை பணியாளர்களுக்கு தீ விபத்து மற்றும் பேரிடர் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பாதுகாப்பு ஒத்திகை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் தீயணைப்பு வீரர்கள் தீ விபத்து ஏற்பட்டால் அதை அணைப்பது குறித்து செயல்முறை விளக்க பயிற்சி அளித்தனர். மேலும் பேரிடரில் சிக்கியவர்களை மீட்பது குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது. தீயணைப்பு துறையில் பயன்படுத்தப்படும் நவீன உபகரணங்கள், ஆபத்துக்காலத்தில் பயன்படுத்தப்படும் உபகரணங்கள் குறித்தும் அவை எப்படி பயன்படுத்தப்படுகின்றன என்பது குறித்தும், ஆபத்துக்காலத்தில் நோயாளிகளை காப்பாற்றுவது குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது. அருப்புக்கோட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் ராம்ராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த ஒத்திகை நிகழ்ச்சியில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் கோமதி, செவிலியர்கள், மருத்துவப்பணியாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்