தேசிய சித்த மருத்துவ தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலம்
திருவண்ணாமலையில் தேசிய சித்த மருத்துவ தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
தேசிய சித்த மருத்துவ தினத்தை முன்னிட்டு இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை சார்பில் திருவண்ணாமலையில் சித்தா விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் கலா தலைமை தாங்கினார்.
சிறப்பு அழைப்பாளராக திருவண்ணாமலை மாவட்ட கல்வி அலுவலர் காளிதாஸ் கலந்துகொண்டு ஊர்வலத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். திருவண்ணாமலை தாலுகா அலுவலகத்தில் தொடங்கிய ஊர்வலம் அண்ணா சிலை, காந்தி சிலை, காமராஜர் சிலை வழியாக சென்று செங்கம் சாலையில் ஆயுஸ் மருத்துவமனையில் நிறைவடைந்தது.
இதில் 100-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு ஊர்வலமாக சென்றனர். மாவட்ட பள்ளிகள் ஆய்வாளர் செந்தில்குமார், டேனிஸ் மிஷன் பள்ளி தலைமை ஆசிரியர் கியூபர்ட் தனசுந்தரம், ஆயுஸ் மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.