அரசு பெண்கள் பள்ளியில் விழிப்புணர்வு ஊர்வலம்
வேதாரண்யம் அரசு பெண்கள் பள்ளியில் விழிப்புணர்வு ஊர்வலம்
வேதாரண்யம்:
வேதாரண்யம் நகராட்சியின் சார்பில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மனித கழிவுகளை மனிதர்களே அகற்றும் முறையை மாற்ற வலியுறுத்தி விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. பள்ளி வளாகத்தில் தொடங்கிய ஊர்வலத்தை நகராட்சி ஆணையர் வெங்கடலட்சுமணன் தொடங்கி வைத்தார். ஊர்வலத்தில் சுகாதார ஆய்வாளர் மணிவண்ணன் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், தூய்மை இந்தியா திட்ட பணியாளர்கள் கலந்துகொண்டனர். இதில் மனித கழிவுகளை மனிதர்களே அகற்றும் நிலையை மாற்ற வேண்டும் எனவும், நகராட்சி உரிமம் பெற்ற வாகனங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் எனவும், மேலும் இந்த சேவையை பெற கட்டணமில்லா தொலைபேசி எண் 14420 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் எனவும் மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.