அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை குறித்த விழிப்புணர்வு ஊர்வலம்

அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

Update: 2023-04-12 18:35 GMT

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட ராயனூர் ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப்பள்ளியில் 2023-24-ம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை குறித்து பொதுமக்கள் மற்றும் பெற்றோர்களிடையே தெரியப்படுத்தும் வகையில் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தை பள்ளி தலைமையாசிரியை தேன்மொழி தொடங்கி வைத்தார்.

ராயனூர் பள்ளி வளாகத்தில் இருந்து புறப்பட்ட ஊர்வலம் கடைவீதி உள்பட முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் பள்ளியை வந்தடைந்தது. ஊர்வலத்தில் கலந்து கொண்ட மாணவ-மாணவிகள் அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கையின் முக்கியத்துவம், அவசியம் குறித்த விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தியவாறு ஊர்வலமாக சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்