புத்தக திருவிழா குறித்து விழிப்புணர்வு ஊர்வலம்
வந்தவாசியில் புத்தக திருவிழா குறித்து விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
வந்தவாசி
திருவண்ணாமலை .மாவட்ட நிர்வாகம் மற்றும் பொது நூலகத் துறை சார்பில் புத்தக திருவிழா திருவண்ணாமலை காந்தி நகர் மைதானத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) 19-ந் தேதி வரை நடைபெற உள்ளது.
இதுகுறித்த விழிப்புணர்வு ஊர்வலம் வருவாய்த்துறை சார்பில் வந்தவாசியில் நடைபெற்றது. வந்தவாசி தாசில்தார் கி.ராஜேந்திரன் தலைமை தாங்கினார்.
ஓய்வு பெற்ற தாசில்தார் வ.முருகானந்தம், துணை தாசில்தார் சதீஷ், வருவாய் ஆய்வாளர்கள் கலைவாணி, புவனேஸ்வரி, வெங்கடேசன், கிராம நிர்வாக அலுவலர் முகமதுயாசிர் மற்றும் வந்தவாசி அகிலாண்டேஸ்வரி கல்லூரி மாணவிகள் பங்கேற்றனர்.
வந்தவாசி தாலுகா அலுவலகத்தில் இருந்து தொடங்கிய ஊர்வலம் பஜார் வீதி, பழைய பஸ் நிலையம், கோட்டை மூலை வழியாகச் சென்றது.
அப்போது புத்தகத் திருவிழா குறித்த துண்டு பிரசுரங்கள் பொதுமக்களிடம் வழங்கப்பட்டன.
ஊர்வலத்தில் தாலுகா அலுவலக அலுவலர்கள் நேதாஜி, குப்பன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.