வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பது குறித்து விழிப்புணர்வு

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Update: 2022-08-23 18:29 GMT

பெரம்பலூரில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பது குறித்து கல்லூரி மாணவ-மாணவிகளிடையே விழிப்புணர்வு நிகழ்ச்சி, மாவட்ட நிர்வாகம் சார்பில் நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா தலைமை தாங்கி, நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் பேசுகையில், ஒரே வாக்காளரின் பெயர், ஒன்றுக்கு மேற்பட்ட தொகுதியில் அல்லது ஒரே தொகுதியில், ஒன்றுக்கு மேற்பட்ட எண்ணிக்கையில் இடம் பெற்றுள்ளதா? என்பதை கண்டறிவதற்காக, நாடு முழுவதும் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அனைத்து வாக்காளர்களும் தாமாக முன்வந்து தங்கள் ஆதார் எண்ணை வழங்குவதற்காக 8டி என்ற புதிய படிவம் தேர்தல் ஆணையத்தால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைக்கும் பணி கடந்த 1-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது. வாக்காளர்கள் நேஷனல் வோட்டர்ஸ் சர்வீஸ் போர்டல், வோட்டர்ஸ் ஹெல்ப் லைன், வோட்டர் போர்ட்டல் ஆகிய ஏதேனும் ஒரு செயலியை பயன்படுத்தி தங்கள் ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் தாமாக முன்வந்து இணைத்து கொள்ளலாம்.

ஆதார் எண்ணை இணைத்த பின்பு அதற்கு வழங்கப்படும். குறியீட்டு எண்ணை தனியாக குறித்து வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் செல்போன் எண்ணை உள்ளீடு செய்து, அதன்மூலம் பெறப்படும் தகவலை பதிவு செய்து தேர்தல் ஆணையத்தால் வழங்கப்படும் "இ" சான்றிதழை பெற்று பயனடையலாம். புதிய வாக்காளர் சேர்க்கையை அதிகப்படுத்தவும், எளிதாக்கவும் இந்திய தேர்தல் ஆணையத்தால் சிறப்பு முகாம்கள் வருகிற நவம்பர் மாதம் முதல் நடைபெற உள்ளது, என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்