பெண்களின் வாழ்வாதார செயல்பாடுகள் குறித்த விழிப்புணர்வு
பெண்களின் வாழ்வாதார செயல்பாடுகள் குறித்த விழிப்புணர்வு நடந்தது.
ேதாகைமலை ஒன்றிய அலுவலகத்தில் பெண்களின் வாழ்வாதார செயல்பாடுகள், மகளிர் திட்டம் மற்றும் முன்னோடி வங்கி செயல்பாடு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு தோகைமலை ஒன்றியக் குழுத்தலைவர் சுகந்தி சசிகுமார் தலைமை தாங்கினார். மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் வசந்த், தோகைமலை ஒன்றிய ஆணையர்கள் ராஜேந்திரன், பாலச்சந்தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தொடர்ந்து பெண்களின் முன்னேற்றம் மற்றும் முன்னோடி வங்கிகளின் செயல்பாடுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பின்னர் மகளிர் சுய உதவிக்குழுவினரின் சிறு தானிய உணவு வகைகள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டு உணவு திருவிழா நடைபெற்றது.
இதனை அனைவரும் பார்வையிட்டனர். இதில் மகளிர் சுய உதவிக்குழுவினர் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக முன்னேற்றத்தை நாடும் வட்டாரங்கள் திட்டத்தின் 6-ம் கட்ட பணிகள் ெதாடங்கி வைக்கப்பட்டது.