சைபர் கிரைம் குற்றங்கள் தடுப்பு விழிப்புணர்வு கூட்டம்

கே.வி.குப்பம் போலீஸ் நிலையத்தில் சைபர் கிரைம் குற்றங்கள் தடுப்பு விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.

Update: 2023-02-20 13:05 GMT

கே.வி.குப்பம் போலீஸ் நிலையத்தில் சைபர் கிரைம் குற்றங்களை தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இன்ஸ்பெக்டர் செந்தில்குமாரி தலைமை தாங்கினார். இதில் நகை, அடகுக் கடைகள், திருமணமண்டபங்களின் உரிமையாளர்கள், மேலாளர்கள், கூட்டுறவு வங்கிகளின் மேலாளர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், சந்தேகத்திற்கு உரிய வகையிலான நடமாட்டங்கள் இருந்தால் 1930 என்கிற கட்டணம் இல்லாத எண்ணில் புகார் அளிக்கலாம். கடைகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும்போது கடைக்கு உள்ளே வருவோர் போவோர் நன்கு தெரியும்படியும், சாலையின் அடுத்த பகுதிவரை காட்சிகள் பதிவாகும்படியும் கேமராக்களை பொருத்த வேண்டும். இரவு நேரங்களில் ரோந்துப் பணிகளுக்கான பாது காவலர்களை நியமிக்க வேண்டும் என்பது போன்றவை குறித்து தெரிவிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்