குற்றத்தடுப்பு குறித்த விழிப்புணர்வு கூட்டம்

குற்றத்தடுப்பு குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

Update: 2023-04-29 18:44 GMT

காரையூர் போலீஸ் நிலையத்தில் கிராம ஊராட்சி தலைவர்களுக்கான குற்றத்தடுப்பு விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு காரையூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் மதியழகன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் காரையூர் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட கிராம ஊராட்சி பகுதிகளில் குற்றச்சம்பவங்களை தடுக்கும் வகையில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டது. கூட்டத்தில் மேலத்தானியம், எம்.உசிலம்பட்டி, கீழத்தானியம், காரையூர், அரசமலை உள்ளிட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்