பெண்களுக்கு எதிரான குற்றத்தடுப்பு விழிப்புணர்வு கூட்டம்
ஆலங்காயத்தில் பெண்களுக்கு எதிரான குற்றத்தடுப்பு விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன், மாவட்டம் முழுவதும் விழிப்புணர்வு ஏற்படுத்த போலீசாருக்கு அறிவுறுத்தினார். அதைத் தொடர்ந்து, ஆலங்காயம் அருகே செயல்பட்டு வரும் தனியார் தொழிற்சாலையிலும், நிம்மியம்பட்டு பஸ் நிறுத்த பகுதியிலும் ஆலங்காயம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனி தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர், சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர்கள் குணசேகரன், வீரவல்லி உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இதில் கலந்து கொண்ட பெண்கள் மற்றும் பொதுமக்களுக்கு சைபர் குற்றங்கள், போக்சோ சட்டம், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் மற்றும் வன்முறைகளை தடுக்க சட்டத்தில் உள்ள வழிமுறைகள் குறித்து போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.