பன்றி வளர்ப்போருக்கான விழிப்புணர்வு கூட்டம்
பன்றி வளர்ப்போருக்கான விழிப்புணர்வு கூட்டம் 5-ந் தேதி நடக்கிறது.
ஆரணி
5-ந் தேதி பன்றி வளர்ப்போருக்கான விழிப்புணர்வு கூட்டம் நடக்கிறது.
ஆரணி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொது சுகாதாரத்துக்கும் பொது மக்களின் உயிருக்கும் உடைமைக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்தும் விதமாக பன்றிகளை பொது இடங்களில் திரிகின்றன. அவ்வாறு பொது வெளியில் விடக்கூடாது பல முறை அறிவிப்புகள் வழங்கியும் அப்புற படுத்தாமல் பன்றிகள் தொடர்ந்து பொது இடங்களில் பன்றி வளர்ப்பவர்கள் விடுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.இந்த நிலையில் பன்றிகளை நகராட்சி மூலம் பிடித்து அப்புறப்படுத்துவது தொடர்பாக ஆணி நகராட்சி அலுவலகத்தில் வருகிற 5-ந் தேதி (வியாழக்கிழமை) 4 மணி அளவில் பன்றி வளர்போருடன் விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட உள்ளதாக நகராட்சி ஆணையாளர் தமிழ்ச்செல்வி தெரிவித்துள்ளார்.========