தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் ஆட்சிமொழி சட்ட வார விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, பெரியகுளத்தில் வணிக நிறுவனங்களில் தமிழில் பெயர் பலகைகள் வைப்பது தொடர்பான விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. கூட்டத்தில், தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் இளங்கோ வரவேற்றார். உலகத் தமிழ்ச் சங்கத்தின் முன்னாள் இயக்குனர் சந்திரா, வையைத் தமிழ்ச்சங்கத்தின் நிறுவனர் இளங்குமரன் ஆகியோர் கலந்துகொண்டு வணிக நிறுவனங்களில் பெயர் பலகைகள் வைப்பதற்கான சட்டம் குறித்தும், வைக்க வேண்டிய தேவை குறித்தும் பேசினர். இதில் பெரியகுளம் பகுதியை சேர்ந்த வணிகர்கள், தமிழ் ஆர்வலர்கள் பலர் கலந்துகொண்டனர்.