விழிப்புணர்வு கூட்டம்

சங்கரன்கோவில் அருகே உழவர் சந்தை குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.

Update: 2022-07-07 14:40 GMT

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் அருகே உள்ள கண்டிகைப்பேரி கிராமத்தில் சங்கரன்கோவில் வட்டார தோட்டக்கலை துறை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பில் உழவர் சந்தை விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் காய்கறி பயிர்களான தக்காளி, வெண்டைக்காய், கத்தரிக்காய், வெங்காயம் போன்றவை சங்கரன்கோவில் உழவர் சந்தைக்கு எடுத்து வந்து விவசாயிகளால் விற்பனை செய்யப்படும் போது 20 சதவீதம் அதிக விலை கிடைக்க வாய்ப்பு இருக்கிறது என்று தோட்டக்கலை துறை மற்றும் வேளாண் விற்பனை துறையினரால் எடுத்து கூறப்பட்டது. கூட்டத்தில் தோட்டக்கலை உதவி இயக்குனர் ராமச்சந்திரன், தோட்டக்கலை அலுவலர் குப்புசாமி, உதவி தோட்டக்கலை அலுவலர்கள் தங்கராஜ், சண்முகவேல் ராஜன், லட்சுமணன், சிவராம் பேசினார்கள்.

இதில் வேளாண் வணிகத்துறை அலுவலர் கருப்பையா, உதவி வேளாண் அலுவலர்கள் உமாமுனி, தங்கவிநாயகம், ஈஸ்வரன், விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் தோட்டக்கலை அலுவலர் குப்புசாமி நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்