சிவகங்கை
சிவகங்கை பெண்கள் மேல்நிலைபள்ளியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் இளம் வயது கர்ப்பங்களினால் விளையும் தீமைகள், குறித்த விழிப்பணர்வு கூட்டம் நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் சிவமணி தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் சிவகங்கை மாவட்ட மக்கள் கல்வி மற்றும் தகவல் அலுவலர் செந்தில்குமார் பேசும்போது, மாணவிகள் மத்தியில் இளம் வயது திருமணங்களால் விளையும் பாதிப்புகள், இளம் வயது கர்ப்பங்களினால் விளையும் தீமைகள், குழந்தைகளும், பெண்களும் தங்களை பாதுகாத்துக் கொள்ளும் வழிமுறைகள் மற்றும் உதவி எண்கள் குறித்து தெரிவித்தார்.
கூட்டத்தில், மாவட்ட விரிவாக்க கல்வியாளர் மதியரசு, குழந்தைகள் மற்றும் பெண்கள் மைய சேர்மன் சாந்தி, புள்ளி விவர உதவியாளர் பிருந்தா, வட்டார சுகாதார புள்ளியியலாளர் நூர் ஹஸ்லினா, வழக்குப் பணியாளர்கள் சரண்யா, சங்கர அபர்னா, மற்றும் ஆசிரியர்கள் மாணவிகள் கலந்து கொண்டனர்.