மன்னார்குடியில் வருமான வரித்துறையின் சார்பில் வருமான வரியினை முன்கூட்டியே செலுத்துவதனால் ஏற்படக்கூடிய பலன்கள் குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு
தஞ்சை வருமான வரித்துறை கூடுதல் ஆணையர் நித்தியா, துணை ஆணையர் சீனிவாசன் ஆகியோர் தலைமை தாங்கினர். மன்னார்குடி வர்த்தக சங்க தலைவர் ஆர்.வி.ஆனந்த், வர்த்தக சங்க அமைப்பு செயலாளர் எஸ்.எம்.டி.கருணாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக வர்த்தக சங்க பொருளாளர் பிரபாகரன் வரவேற்றார்.
கூட்டத்தில் வருமான வரியை முன்கூட்டியே செலுத்துவதால் வியாபாரிகளுக்கு ஏற்படக்கூடிய நன்மைகள் குறித்து வர்த்தகர்களிடையே விளக்கி கூறப்பட்டது. இதில் வருமான வரித்துறை அலுவலர்கள் ராஜசேகரன், முருகேசன், வில்விஜயன் ஆகியோர் பேசினர். கூட்டத்தில் முன்னாள் நகராட்சி தலைவர் வி.எஸ். ராஜேந்திரன், மன்னார்குடி ஓட்டல் உரிமையாளர் சங்க நிர்வாகி தனம் நாராயணன் மற்றும் வர்த்தக சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். முடிவில் ஓட்டல் சங்க நிர்வாகி பாரதிதாசன் நன்றி கூறினார்.