பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம்
பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
கடவூர் ஒன்றியத்தில் உள்ள 20 ஊராட்சிகளில் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. இதில், ஆதனூர் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் பூமா ராஜேந்திரன் தலைமையிலும், தரகம்பட்டி ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் வேதவள்ளிசெல்வராஜ் தலைமையிலும் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தியவாறு ஊர்வலமாக சென்றனர். இதில், ஒன்றிய ஆணையர் கிருஷ்டி, பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.