பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

ராணிப்பேட்டையில் நடந்த பெண்களுக்கு எதிரான வன்முறை விழிப்புணர்வு ஊர்வலத்தை கலெக்டர் பாஸ்கரபாண்டியன் தொடங்கிவைத்தார்.

Update: 2022-11-25 18:37 GMT

ராணிப்பேட்டையில் நடந்த பெண்களுக்கு எதிரான வன்முறை விழிப்புணர்வு ஊர்வலத்தை கலெக்டர் பாஸ்கரபாண்டியன் தொடங்கிவைத்தார்.

விழிப்புணர்வு ஊர்வலம்

ராணிப்பேட்டையில் சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு நடந்த விழிப்புணர்வு ஊர்வலத்தை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தொடங்கி வைத்தார்.

ராணிப்பேட்டை முத்துக்கடையில், சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினத்தையொட்டி, தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம், மகளிர் திட்டம், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை இணைந்து நடத்திய விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

முத்துக்கடை பஸ் நிறுத்தம் அருகில் இருந்து புறப்பட்ட ஊர்வலத்தை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் கொடியசைத்து தொடங்கி வைத்து, ஊர்வலத்தில் நடந்து சென்றார். நவல்பூர் வழியாக அரசு ஆண்கள் பள்ளியை சென்றடைந்து.

உறுதி மொழி ஏற்பு

இதனைத்தொடர்ந்து பாலின வன்முறை தவிர்த்தலுக்கான விழிப்புணர்வுகள் குறித்த பதாகைகளை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வெளியிட்டார். பாலின வன்முறை தவிர்த்தலுக்கான பிரசார உறுதி மொழியும் நிகழ்ச்சியில் எடுத்துக் கொள்ளப்பட்டது.

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன் முன்னிலை வகித்தார். மகளிர் திட்ட இயக்குநர் நானிலதாசன், மாவட்ட சமூக நல அலுவலர் (பொறுப்பு) இந்திரா, உதவி மகளிர் திட்ட அலுவலர்கள் சாகுல் ஹமீத், சுபாஷ் சந்திரன், ராணிப்பேட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு பிரபு, போலீஸ் இன்ஸ்பெக்டர் காண்டீபன், முன்னோடி வங்கி மேலாளர் ஆலியம்மா ஆபிரஹாம், சமூக நலத்துறை ஒருங்கிணைந்த சேவை நிர்வாகி மலர்விழி மற்றும் அதிகாரிகள், பெண்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்