காவேரிப்பட்டணம் அரசு மகளிர் பள்ளியில்உலக சுற்றுச்சூழல் தின விழிப்புணர்வு ஊர்வலம்கலெக்டர் சரயு தொடங்கி வைத்தார்

Update: 2023-06-06 05:45 GMT

காவேரிப்பட்டணம்

காவேரிப்பட்டணம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் உலக சுற்றுச்சூழல் தின விழா நடைபெற்றது. இதில் மாவட்ட கலெக்டர் சரயு கலந்து கொண்டு மரக்கன்றுகள் நடும் பணியை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசுகையில், பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப சுற்றுச்சூழல் மாசு அதிகரித்து வருகிறது. அதனை தவிர்க்கும் வகையில் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்த்து மஞ்சப்பை, துணிபைகளை பயன்படுத்த வேண்டும். மரக்கன்றுகளை நடவு செய்து இயற்கையை பாதுகாக்க உறுதி ஏற்க வேண்டும். சுற்றுப்புற தூய்மையை கடைபிடித்து, மரக்கன்றுகளை நடவு செய்து பராமரிக்க உறுதி ஏற்க வேண்டும் என்றார். பின்னர் சுற்றுச்சூழல் தின விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலத்தை கலெக்டர் சரயு கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஊர்வலத்தில் பள்ளி மாணவிகள், தன்னார்வலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். விழாவில் 2 பேருக்கு சிறந்த பசுமையாளர் விருதுகளை கலெக்டர் வழங்கினார்.

இந்த விழாவில் முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, இணை தலைமை சுற்றுச்சூழல் பொறியாளர் சண்முகம், தாசில்தார் சம்பத், பள்ளி தலைமை ஆசிரியை வளர்மதி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் தேங்காய் சுப்பிரமணி, வட்டார வளர்ச்சி அலுவலர் ரவிச்சந்திரன், ஊராட்சி மன்ற தலைவர் தமிழரசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்