சீர்காழி நகராட்சி சார்பில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்திற்கு நகர்மன்ற தலைவர் துர்கா ராஜசேகரன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். சுகாதார அலுவலர் செந்தில் ராம்குமார், சுகாதார ஆய்வாளர் செல்லத்துரை, நகர் மன்ற உறுப்பினர் வேல்முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகராட்சி ஆணையர் (பொறுப்பு) ராஜகோபால் வரவேற்று பேசினார். சீர்காழி தமிழிசை மூவர் மணிமண்டபம் அருகில் இருந்து தொடங்கிய ஊர்வலம் புதிய பஸ் நிலையம், கச்சேரி ரோடு, அரசு ஆஸ்பத்திரி சாலை, கடைவீதி வழியாக சென்று கொள்ளிடம் முக்கூட்டை அடைந்தது. ஊர்வலத்தின்போது மாணவர்கள் சார்பில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் மூலம் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. விளையாட்டுப் போட்டிகளும் நடத்தப்பட்டது. இதில், துப்புரவு மேற்பார்வையாளர்கள் வீரப்பன், கலியபெருமாள், அய்யப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றுக்கொள்ளப்பட்டது.