கோத்தகிரியில் விழிப்புணர்வு மாரத்தான்
தூய்மை இந்தியா குறித்து கோத்தகிரியில் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது.
கோத்தகிரி,
கோத்தகிரியில் தூய்மை இந்தியா மற்றும் வலிமையான இந்தியா திட்டம் குறித்து பொதுமக்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், அரசு உதவி பெறும் பாலிடெக்னிக் கல்லூரி நாட்டு நலப்பணி திட்டம் மற்றும் விளையாட்டு துறை சார்பில், மினி மாரத்தான் நடைபெற்றது. இதனை பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர் விக்னேஷ் கொடியசைத்து தொடங்கி வைத்தார். கோத்தகிரி சக்தி மலைப்பகுதியில் இருந்து தொடங்கிய விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டியில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள் 150 பேர் கலந்துகொண்டனர். இதில் கல்லூரி மாணவர்கள் சுனில்குமார் முதலிடம், சரண் 2-ம் இடம், லோகேஸ்வரன் 3-ம் இடத்தையும் பிடித்தனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு கோப்பை மற்றும் பதக்கம் வழங்கப்பட்டன.