விழிப்புணர்வு மாரத்தான் போட்டி

மண்டபம் பேரூராட்சியில் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது.

Update: 2023-02-04 18:49 GMT

பனைக்குளம், 

ராமநாதபுரம் ராஜா மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் முகவை சங்கமம் என்னும் 5-வது புத்தகத்திருவிழா வருகிற 9-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை நடைபெறுகிறது. இதில் 100 அரங்குகளில் 1½ லட்சம் புத்தகங்கள் இடம் பெறவுள்ளன. இந்த புத்தகத்திருவிழா தொடர்பாக ராமநாதபுரம் மாவட்ட பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகள், பொதுமக்கள், அரசு பணியாளர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் நடத்த ராமநாதபுரம் கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் உத்தரவிட்டார்.

சிவகங்கை மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் ராஜாவின் அறிவுறுத்தல்படியும், மண்டபம் பேரூராட்சியில் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நேற்று காலை நடைபெற்றது. ராமேசுவரம் நெடுஞ்சாலை மீன்வளத்துறை அலுவலகம் செல்லும் வழி பகுதியில் விழிப்புணர்வு மாரத்தான் போட்டியை பேரூராட்சி தலைவர் ராஜா தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு துணைத்தலைவர் நம்பு ராஜன், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர். இந்த மாரத்தான் போட்டி மண்டபம் பேரூராட்சி கடற்கரை பூங்கா பகுதியில் நிறைவடைந்தது. இதில் முதல் 15 இடங்களை பிடித்த மாணவர்கள், ஆர்வமுடன் பங்கேற்ற பள்ளி மாணவ-மாணவிகள் 15 பேர் என 30 பேருக்கு பரிசு வழங்கப்பட்டது.. இந்நிகழ்ச்சியில் போலீஸ் இன்ஸ்பெக்்டர் ஜீவானந்தம், சப்-இன்ஸ்பெக்டர் கோட்டைச்சாமி, மண்டபம் முகாம் அரசு மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் ரமேஷ், சுகாதார ஆய்வாளர் மெய். ராமச்சந்திரன், பேரூராட்சி உறுப்பினர்கள் கலாவதி, ஜெயந்தி, வாசிம் அக்ரம், முருகானந்தம், சித்ரா தேவி, சாதிக்பாட்ஷா, கல்யாணி, மகேஸ்வரி உள்பட பலர் பங்கேற்றனர். செயல் அலுவலர் இரா.இளவரசி வழிகாட்டல்படி இளநிலை உதவியாளர் சுப.முனியசாமி ஏற்பாடு செய்திருந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்