மாணவ-மாணவிகளுக்கு விழிப்புணர்வு
திடக்கழிவு மேலாண்மை குறித்து மாணவ-மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது
திருவையாறை அடுத்த மேலத்திருப்பூந்துருத்தி பேரூராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் குறித்து பள்ளி மாணவ-மாணவிகளுக்கு ஓவியம், கட்டுரை, பேச்சு போட்டிகளும், கலந்துரையாடல் நிகழ்ச்சியும் மேலத்திருப்பூந்துருத்தி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பேரூராட்சி துணைத்தலைவர் அகமது மைதீன் தலைமை தாங்கினார். பேரூராட்சி செயல் அலுவலர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் சம்பத்குமார் மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு திடக்கழிவு மேலாண்மை திட்ட செயல்பாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஓவியம், கட்டுரை, பேச்சு போட்டி நடத்தினார்கள். இதில், பேரூராட்சி பணியாளர்கள், வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.