உணவு பொருட்களில் கலப்படம் கண்டுபிடிப்பது குறித்துகல்லூரி மாணவிகளுக்கு விழிப்புணர்வு

Update: 2023-08-09 19:45 GMT

காரிமங்கலம்

காரிமங்கலம் மற்றும் பாலக்கோடு ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் மற்றும் இளநிலை பொது பகுப்பாய்வாளர் கோபி ஆகியோர் காரிமங்கலத்தில் உணவு பொருட்களில் கலப்படம் கண்டுபிடிப்பது குறித்து மாணவிகள், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். காரிமங்கலம் அரசு மகளிர் அறிவியல் கலை கல்லூரியில் முதல்வர் கீதா தலைமையில் கல்லூரி மாணவிகளுக்கு உணவு பொருட்களில் கலப்படம் கண்டுபிடிப்பது குறித்து அலுவலர்கள் விளக்கி கூறினர். மேலும் நடமாடும் பகுப்பாய்வு வாகனம் மூலம் உணவு பொருட்களை களத்திலேயே ஆய்வு செய்து கலப்படத்தை கண்டறிவது குறித்து பொதுமக்களுக்கு செயல்விளக்கம் அளித்தனர். தொடர்ந்து காரிமங்கலம் பேரூராட்சியில் செயல் அலுவலர் ஆயிஷா மற்றும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நகரில் உணவு பொருட்கள் விற்பனை செய்யும் கடைக்காரர்கள் மற்றும் வியாபாரிகளுக்கு துண்டுப் பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்