பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு

பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Update: 2023-02-21 18:45 GMT


நெல்லிக்குப்பம்,

நெல்லிக்குப்பம் அருகே திருக்கண்டேஸ்வரத்தில் உள்ள நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் மாணவர்கள் நல வாழ்வு சிந்தனைக்குழு சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் தலைமை தாங்கி, மாணவர்களுக்கு பல்வேறு அறிவுரைகள் வழங்கி பேசினார். பள்ளி தலைமை ஆசிரியர் தேவநாதன் வரவேற்றார். இதில் மாணவர்கள் வாழ்க்கையில் நல்லொழுக்கத்துடன் வாழ்வதற்கு விழிப்புணர்வு கருத்துரைகள் வழங்கப்பட்டன. இதில் தனிப்பிரிவு போலீஸ் தண்டபாணி, பள்ளி ஆசிரியர் ஜோஸ்மின் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் சுமதி நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்