விழிப்புணர்வு போட்டி

கல்லூரி மாணவிகளுக்கு விழிப்புணர்வு போட்டி நடந்தது.

Update: 2023-02-19 21:08 GMT

பேட்டை:

நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகம், பழைய பேட்டை ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரியின் நுண்கலை மன்றம் இணைந்து மதுபானங்கள் மற்றும் கள்ளசாராயத்தினால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு போட்டியை கல்லூரி மாணவிகளுக்கிடையே நடத்தியது. பேச்சுப்போட்டியில் 11 மாணவிகளும், கட்டுரைப்போட்டியில் 129 மாணவிகளும், ஓவியப்போட்டியில் 58 மாணவிகளும் கலந்து கொண்டனர்.

கல்லூரி முதல்வர் மைதிலி தலைமை தாங்கினார். மக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பழையபேட்டை பஸ் நிறுத்தத்தில் நடனம், பாடல் மற்றும் நாடகம் உள்ளிட்ட மாணவிகள் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.

சிறப்பு விருந்தினராக நெல்லை மாநகர மதுவிலக்கு மற்றும் அமலாக்கப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துலெட்சுமி கலந்து கொண்டு பேசினார். இதில் பேராசிரியைகள், மாணவிகள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை உதவி பேராசிரியை அழகியநாயகி செய்து இருந்தார். 

Tags:    

மேலும் செய்திகள்