போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு பிரசாரம்

போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது.

Update: 2023-03-14 20:10 GMT

சிவகாசி, 

சிவகாசி பஸ் நிலையத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது. அப்போது 1 கோடி கையெழுத்து வாங்கும் பிரசாரத்தை அசோகன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- நாங்கள் படிக்கும் போது இதுபோன்ற விழிப்புணர்வு பிரசாரங்கள் அவசியம் இல்லாமல் இருந்தது. ஆனால் தற்போது மாணவர்கள் பள்ளி படிக்கும்போதே மதுவுக்கு அடிமையாகி வருவது வேதனையை அளிக்கிறது. சினிமா, டி.வி. சீரியல்களில் வாலிபர்கள் மது அருந்துவது போல் காட்சிகள் வருகிறது. இதை பார்க்கும் மாணவர்களும், வாலிபர்களும் மதுவால் தீங்கு இல்லை என்று நினைக்கிறார்கள். அதனால் இதுபோன்ற காட்சிகளை தவிர்க்க வேண்டும். மதுவால் ஏற்பாடும் பாதிப்புகள் குறித்து இளைஞர்கள் தெரிந்து இருக்க வேண்டும். மற்றவர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்ப டுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் சிவகாசி மேயர் சங்கீதா இன்பம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகிகள் மரியராஜா, பாண்டீஸ்வரன், ஸ்ரீதர், சரவணன், ஜெயபாரத், கருப்பசாமி, கணேசன், விக்டர், முருகன், சுரேஷ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்