விழிப்புணர்வு பிரசாரம்

குழந்தை திருமணத்துக்கு எதிரான விழிப்புணர்வு பிரசாரம் நேற்று நடைபெற்றது.

Update: 2022-06-22 19:07 GMT

சிவகாசி,

சிவகாசி ஒன்றியத்துக்கு உட்பட்ட பூவநாதபுரம் கிராமத்தில் இயங்கி வரும் அரசு மேல்நிலைப்பள்ளியில் குழந்தை திருமணத்துக்கு எதிரான விழிப்புணர்வு பிரசாரம் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு தலைமையாசிரியர் இளங்கோவன் தலைமை தாங்கினார். பெருமாள் அம்மாள் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் சிவகாசி அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் திலகராணி வரதராஜ் கலந்து கொண்டு பேசியதாவது:-தற்போது பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகிறது. இதை தவிர்க்க மாணவிகள் மிகுந்த அக்கறையுடன் செயல்பட வேண்டும். சமூக வலை தளங்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். பெற்றோர் அனுமதியின்றி செல்போன்களை பயன்படுத்த கூடாது. முகம் தெரியாத நபர்களிடம் பேசுவதும், பழகுவதையும் தவிர்க்க வேண்டும். பள்ளிக்கு வரும் போதும், திரும்பி செல்லும் போதும் ஏதாவது தொந்தரவு ஏற்பட்டால் உடனே 1098 என்ற எண்ணை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் அல்லது பெற்றோர்கள் செல்போனில் காவல்உதவி செயலியை பதிவிறக்கம் செய்து அதன் மூலம் புகார் கொடுக்கலாம். 18 வயதுக்கு கீழ் உள்ள மாணவிகள் திருமணம் செய்து கொள்ள கூடாது. திருமணத்துக்கு குடும்பத்தினர் வற்புறுத்தினால் 1098 எண்ணில் புகார் தெரிவிக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியைகள் சொல்லின்செல்வி, அருண்மொழி, சிங்கநாச்சியார், மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்