விழிப்புணர்வு முகாம்

விழிப்புணர்வு முகாம் நடந்தது.

Update: 2023-04-09 18:45 GMT

செங்கோட்டை:

செங்கோட்டை நகராட்சி தூய்மை நகரங்களுக்கான மக்கள் இயக்கம் சார்பில் எனது குப்பை எனது பொறுப்பு என்ற விழிப்புணா்வு முகாம் நடந்தது. நகராட்சி ஆணையாளா் ஜெயப்பிரியா அறிவுறுத்தலின்படி, சுகாதார ஆய்வாளா் பழனிசாமி வழிகாட்டுதலின்படி பஸ் நிலையத்தில் பொதுமக்களுடன் இணைந்து சுகாதார விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது.

பின்னா் பஸ் நிலையத்தில் அனைத்து பகுதிகளிலும் உள்ள சுவரொட்டிகள், மெயின்ரோட்டில் உள்ள மின்கம்பங்களில் கட்டி இருந்த பிளக்ஸ் பேனர்களை அகற்றினர்.

கொட்டாரம் ரோட்டில் கூட்டு துப்புரவு பணி, வடக்கு ரத வீதியில் கட்டிடக்கழிவுகள் இருக்கும் இடங்கள் தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது.

நிகழ்ச்சியில் நகராட்சி துப்புரவு பணி மேற்பார்வையாளர்கள், தன்னார்வலர்கள், மகளிர் சுய உதவி குழுக்கள் உள்பட பலா் கலந்து கொண்டனர்.



Tags:    

மேலும் செய்திகள்