குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்
குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
எஸ்.புதூர்,
எஸ்.புதூர் மற்றும் உலகம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளிகளில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து நிமிர்ந்து நில் துணிந்து செல் வாசகத்தின் அடிப்படையில் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர்கள் எட்வர்டு ராஜா, ஹென்றி ஜான் ஆகியோர் தலைமை தாங்கினர். குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக சமூகப்பணியாளர் மகாலெட்சுமி முன்னிலை வகித்து, குழந்தை திருமணம், பாலியல் தொந்தரவு, குழந்தைகள் கடத்தல், குழந்தை தொழிலாளர், பள்ளி இடைநிற்றல் உள்ளிட்டவை குறித்து பேசினார். மேலும் சைல்டு லைன் எண் 1098 குறித்தும் பேசினார். இதில் உலகம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கலாராணி கலந்து கொண்டு போதை பழக்கம், தற்கொலை எண்ணம் ஆகியவற்றை தடுத்தல் குறித்து பேசினார்.
முகாமில் சுகாதார ஆய்வாளர் சேஷாத்ரி, குழந்தைகள் இலவச தொலைபேசி சேவை மைய உறுப்பினர் கார்த்திகேயன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.