நிதி நிறுவன மோசடி குறித்து மாணவ-மாணவிகளுக்கு விழிப்புணர்வு

ஆதிபராசக்தி கல்லூரியில் நிதி நிறுவன மோசடி குறித்து மாணவ-மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Update: 2023-10-13 18:51 GMT

ராணிப்பேட்டை மாவட்டம் கலவையை அடுத்த முள்ளுவாடி தேசிய நெடுஞ்சாலையில் இயங்கி வரும் ஆதிபராசக்தி கல்லூரியில் மாணவ- மாணவிகளுக்கு நிதி நிறுவன மோசடி மற்றும் சமூக ஊடகங்களில் போலி கணக்குகள் மூலம் மோசடி, போலி கடன் செயலி போன்ற குறங்கள் நடைபெறாமல் தடுப்பது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார், சப்-இன்ஸ்பெக்டர் தியாகராஜன் ஆகியோர் கலந்து கொண்டு நிதி நிறுவன மோசடிகள் எப்படி நடைபெறுகிறது, அவற்றை எவ்வாறு தடுப்பது என்பது குறித்து காணொலி மூலம் விளக்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

மேலும் இதுபோன்ற குறங்களுக்கு சைபர் கிரைம் உதவி எண் 1930-ஐ அழைக்கவும் அல்லது, www.cybercrime.gov.in இணையதள முகவரியை தொடர்பு கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. இதில் கல்லூரி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்