கடிதம் எழுதுதல் குறித்து பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு
கடிதம் எழுதுதல் குறித்து பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு
ஊட்டி
இந்திய அஞ்சல் துறை சார்பில் தேசிய தபால் வாரம் அக்டோபர் 9-ந் தேதி முதல் 13-ந் தேதி வரை பின்பற்றப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக தேசிய தபால் தினம் நேற்று முன்தினம் ஊட்டி சேரிங்கிராஸ் பகுதியில் உள்ள தபால் நிலையத்தில் கொண்டாடப்பட்டது. இதில் ஊட்டி தனியார் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இதில் அஞ்சல் அலுவலக செயல்பாடுகள் மற்றும் கடிதம் எழுதுவதன் முக்கியத்துவம் குறித்து மாணவர்களுக்கு விளக்கம் அளித்து ஊக்குவிக்கப்பட்டது. இதையடுத்து மாணவர்கள் தாங்கள் எழுதிக் கொண்டு வந்த கடிதங்களை அஞ்சல் பெட்டியில் போட்டனர். இதில் அஞ்சல் துறை ஆய்வாளர் பழனி மற்றும் அலுவலர்கள் பரிமளா தேவி, கோகிலா, ரவி, ஜெயலட்சுமி, மனிஷா உள்பட பலர் கலந்து கொண்டனர்.